களைகட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்...2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பக்தர்கள்...
Srivilliputhur Andal: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளான இன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
Srivilliputhur Andal:
வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் இன்று. இந்த நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இதற்காக கடந்த ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
Srivilliputhur Andal:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் களைகட்டியுள்ளது. இந்த தேரோட்டத்தை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
Srivilliputhur Andal:
இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9:05 மணிக்கு நடைபெற்றது. ஆண்டாள், ரங்க மன்னார் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
Srivilliputhur Andal:
இந்த ஆண்டு தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபுர தேர் தேரோட்ட விழாவையொட்டி இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.