Aadi Pooram: திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர அம்பிகை வழிபாடு..மறக்காமல் செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள்
Aadi Pooram 2022: ஆடிப்பூரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் மறக்காமல் அம்பிகைக்கு செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Aadi Pooram:
ஆடி மாதத்திலேயே மிகவும் விசேஷமான நாளாக கருதப்படும் ஆடிப்பூரம், உலக மக்களை பல்வேறு இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இந்த விழா ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் இதுவாகும். இந்த நல்ல நாளில் மறக்காமல் அம்பிகைக்கு செய்ய வேண்டிய பூஜைகள், பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Aadi Pooram:
ஆடிப்பூர வழிபாடு பலன்கள் :
இந்த நாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும், அம்பிகையை வணங்கி வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூர வழிபாடு கோவில்கள்:
இந்த நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள், தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாமல், வைணவ (பெருமாள்) ஆலயங்களிலும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய விழாவாகும்.
Aadi Pooram:
அம்பாளின் படத்துக்கு வளையல் அலங்காரம்
உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பெண்கள் தலை குளித்து விட்டு, பூஜையறையில் உள்ள அம்பாளின் படத்தை எடுத்து சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம்வைக்க வேண்டும். பின்னர், அதன் மேல் சிவப்பு நிறத் துணியை விரித்து, அதன் மேல் அம்பாளின் திருவுருவப் படத்தை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
பிறகு கண்ணாடி வளையல்களை மாலையாகக் கட்டி அம்பாளின் படத்திற்கு அணிவிக்க வேண்டும். நாம் எப்படி பூமாலையை அம்பாளின் படத்திற்கு அலங்கரிப்போமோ அதேபோல கண்ணாடி வளையல் மாலையை அணிவிக்க வேண்டும்.
அம்மனுக்கு வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆடிப்பூரம் நாளில் அம்மன் வளைகாப்புக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் புத்திரபாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை. குழந்தையில்லாத பெண்களுக்கு விரைவில், குழந்தை மடியில் தவழும்.