சென்னை திரும்ப சூப்பர் சான்ஸ்.! மண்டபம் டூ எக்மோர்- சிறப்பு ரயில் அறிவிப்பு
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பத் தொடங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், கூடுதல் பயணிகளின் வசதிக்காக, மண்டபத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Pongal Celebration
பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தொடர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு பள்ளி மற்றும் அரசு ஊழியர்களுக்கு 6 முதல் 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
இதனையடுத்து பல மாதங்களுக்கு முன்பாகவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து வெளியூர்களுக்கு புறப்பட்டனர். பொங்கல் பொண்டிகையை சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடினர்.
Train Ticket
வெளியூருக்கு பல லட்சம் பேர் பயணம்
அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் அரசு பேருந்து மூலம் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதே போல தனியார் பேருந்துகள், ரயில்களின் மூலமாகவும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் பொங்கல் கொண்டாட்டம் முடிவடைந்து சென்னைக்கு மக்கள் திரும்பி வர தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னைக்கு வரும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் வருகிற திங்கட் கிழமை முதல் பள்ளி மற்றும் அரசு அலுவலங்கள் செயல்பட உள்ளது.
SPECIAL TRAIN
சிறப்பு ரயில் இயக்கம்
எனவே வெளியூர் சென்ற மக்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட தயாராகி வருகிறார்கள். பெரும்பாலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் சென்னைக்கு வரவேண்டிய மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் மண்டபத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Mandapam Chennai train
மண்டபம் டூ சென்னை
ஜனவரி 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூருக்கு காலை 11 மணி 30 நிமிடங்களுக்கு வந்து சேருகிறது. இந்த ரயிலில் ஏசி வகுப்பு பெட்டிகள் மூன்றும், முன்பதிவு பெட்டிகள் 9 , முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 4 - ஆகியவை இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலானது மண்டபத்திலிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, திருச்சி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை வந்து அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது