- Home
- Tamil Nadu News
- தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குஷியான செய்தி.! அமைச்சர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குஷியான செய்தி.! அமைச்சர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு
ஏப்ரல் 2025 பட்டயத் தேர்வில் நிலுவை வைத்திருக்கும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, ஜூன்/ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு மூலம் மாணவர்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பைத் தொடர வழிவகுக்கிறது.

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்
தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வெழுத முன்பு ஒரு ஆண்டுகள் காத்திருந்த பின்னர் மீண்டும் எழுத வேண்டிய நிலை இருந்தது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு உடனடியாக தேர்வெழுத வழிவகை செய்யப்பட்டது.
இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக அடுத்த படிப்பிற்கு செல்ல இயல்கிறது. இந்த நிலையில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணாக்கர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை செம்மைபடுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.
பாலிடெக்னிக் தேர்வில் தோல்வி
ஏப்ரல், 2025-இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அம்மாணாக்கர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக
ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு துணைத்தேர்வு
இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் ஜூன் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜூன் 23ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி நுழைவு சீட்டு பதவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,
சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கருத்தியல் தேர்வு ஜூன் 30-ம் தேதியில் இருந்து ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு ஜூலை 17ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தேர்வானது ஜூலை 30-ஆம் தேதி முடிவடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணை தேர்வுக்கு தேர்வு கட்டணமாக விண்ணப்ப கட்டணம் 30 ரூபாயும் ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 65 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது