MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டில் பெயர் மாற்ற, நீக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

ரேஷன் கார்டில் பெயர் மாற்ற, நீக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற உள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 06 2025, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழக அரசின் சலுகைகளை மற்றும் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்க ரேஷன் கார்டு முக்கியமானதாகவும், அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள நிவாரணம் போன்ற உதவிகளை பெற ரேஷன் கார்டு அத்தியாவசியமாகும்.

எனவே புதிதாக ரேஷன் கார்டு கேட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

25
ரேஷன் கார்டு திட்டம்

ரேஷன் கார்டு திட்டம்

மீதமுள்ளவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதில் தவறான தகவல் இருக்கும் பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய குடும்ப அட்டை பெற பழைய குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும் அதற்காக பல முறை அலைய வேண்டிய நிலை இருக்கும். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக நடைபெறும் முகாமில் ஒரே நாளில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

35
ரேஷன் கார்டில் திருத்தம்

ரேஷன் கார்டில் திருத்தம்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி மார்ச் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகிற சனிக்கிழமை (08.03.2025) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

45
ரேஷன்கார்டு அங்கீகாரச் சான்று

ரேஷன்கார்டு அங்கீகாரச் சான்று

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத வயதான மூத்த குடிமக்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு  அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. . மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், 

55
சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு மாவட்டத்த்திலும் ரேஷன் கார்டில் பெயர், சேர்க்க நீக்குவது தொடர்பான முகாம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved