- Home
- Tamil Nadu News
- அட்ரா சக்கை..! அமெரிக்காவில் ஓடும் பேருந்துகள் தமிழ்நாட்டில்..! இனி எங்க பார்த்தாலும் volvo பஸ் தான்..
அட்ரா சக்கை..! அமெரிக்காவில் ஓடும் பேருந்துகள் தமிழ்நாட்டில்..! இனி எங்க பார்த்தாலும் volvo பஸ் தான்..
Tamil Nadu government luxury bus launch : தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) புதிய வோல்வோ பிரீமியம் பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய Multi Axle சொகுசு பேருந்துகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

போக்குவரத்து சேவையில் புதிய வசதி
நவீன காலத்திற்கு ஏற்ப புதிய, புதிய வசதிகள் அறிமுகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கைக்குள் உலகத்தையே அடைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் உருவாகிவிட்டது. இந்த நிலையில் நீண்ட வெளியூர் பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் பேருந்து பயணங்களை தவிர்த்து ரயில்களில் பயணிக்கவே விரும்புவார்கள்.
இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள். தற்போது மாறிவரும் நவீன காலத்தில் சாலை வசதிகள் உலகதரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு இணையாக பேருந்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்தில் உட்கார்ந்து மட்டுமே செல்லும் வசதி மட்டுமே நிலை மாறி படுத்துக்கொண்டே பயணம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் புதிய வால்வோ பேருந்துகள்
இதன் காரணமாக மக்கள் பேருந்தில் அதிகளவு பயணிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சொகுசாக படுத்துக்கொண்டே செல்லலாம். கட்டணமும் சாதாரண நாட்களில் குறைவாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளோடு போட்டி போடும் வகையில் தமிழக அரசும் களத்தில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து துறையில் ஒரு புதிய மாற்றத்திற்கான பயணம் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் SETC தங்களது முதல் வோல்வோ பிரீமியம் பேருந்துகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இது, பயணிகளுக்கு மிகுந்த வசதியும் பாதுகாப்பும் வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாகும்.
Multi Axle சொகுசு பேருந்து
அந்த வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ள Multi Axle சொகுசு பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணியினையும், உள்கட்டமைப்பு வசதியையும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெங்களூரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 Multi Axle சொகுசு பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20 Multi Axle பேருந்துகளை கொள்முதல்
மேற்படி 20 Multi Axle பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்த வெளி ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெங்ளூரில் அமைந்துள்ள Volvo நிறுவனத்தில், கூண்டு கட்டும் பணியினையும், உள் கட்டமைப்பு வசதிகளையும். போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது Multi Axle சொகுசு பேருந்தினை இயக்குவதற்காக பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆய்வின் போது மேற்படி நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தினை சோதனை முறையில் இயக்கி பார்த்தார்கள். இந்த பேருந்து விரைவில் தமிழகத்தில் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.