MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மிஸ் பண்ணாதீங்க.! ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... சூப்பரான திட்டம்- தேதி குறித்த தமிழக அரசு

மிஸ் பண்ணாதீங்க.! ஒரு மணி நேரத்தில் ரேஷன் கார்டு... சூப்பரான திட்டம்- தேதி குறித்த தமிழக அரசு

தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 10 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் ரேஷன் கடைகள்
Image Credit : our own

தமிழகத்தில் ரேஷன் கடைகள்

ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் கடைகளில் மானிய விலையிலான வழங்கப்படும் உணவுப்பொருட்கள். அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. . எனவே அந்த உணவுப்பொருட்களை பெறுவதற்கு ரேஷன் அட்டை மிகவும் முக்கியம்.

 மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள பாதிப்பு காலங்களில் நிவாரண உதவி வழங்கவும் ரேஷன் அட்டை முக்கிய சான்றாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

25
ரேஷன் அட்டையில் மாற்றம்
Image Credit : our own

ரேஷன் அட்டையில் மாற்றம்

இது மட்டுமில்லாமல் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கியம். எனவே புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்து பல லட்சம் பேர் காத்துள்ளனர். மேலும் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் உணவு பொருள் துறை அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. 

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (11.10.2025) சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

Related Articles

Related image1
தமிழக அரசின் மெகா அறிவிப்பு! 10வது முதல் டிகிரி வரை வேலை! தேர்வு இல்லாமல் 1096 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
Related image2
கர்நாடகாவில் பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு!
35
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
Image Credit : Google

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி அக்டேபார் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கார்டு திருத்த முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

45
முதியோர்களுக்கு அங்கீகாரச் சான்று
Image Credit : our own

முதியோர்களுக்கு அங்கீகாரச் சான்று

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள்,

55
சிறப்பு முகாமில் தீர்வு
Image Credit : our own

சிறப்பு முகாமில் தீர்வு

தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
தமிழக அரசின் மெகா அறிவிப்பு! 10வது முதல் டிகிரி வரை வேலை! தேர்வு இல்லாமல் 1096 காலிப் பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
Recommended image2
கர்நாடகாவில் பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved