MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Seeman : சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்- காரணம் என்ன.?

Seeman : சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்- காரணம் என்ன.?

பெரியாரை விமர்சித்ததால் சீமான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Feb 17 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ் காரணம் என்ன.?

சீமான் கைதா.? வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்- காரணம் என்ன.?

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தேர்தல் களத்தில் கலக்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, சீமானின் ஆவேசமான பேச்சுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ரசிகர்கள் உண்டு. தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் சீமானுக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆதரவாக உள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சதவிகித வாக்குகளை சீமான் பெற்று வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பெரியாரை திடீரென விமர்சித்த சீமான்

பெரியாரை திடீரென விமர்சித்த சீமான்

இந்த நிலையில் தான் கடந்த பல வருடங்களாக பெரியாரை ஆதரித்து புகழந்து பேசிய சீமான் திடீரென பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் சீமான் வீட்டை பெரியார் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கும் பதியபட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு காவல்நிலையத்தில் ஆஜர் ஆக சீமானுக்கு போலீசாரால் சம்மன் வழங்கப்பட்டு வருகிறது.

35
சீமான் வீட்டில் குவிந்த போலீசார்

சீமான் வீட்டில் குவிந்த போலீசார்

அந்த வகையில் இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீடு முன்று திடீரென போலீசார் குவிந்தனர். எனவே சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால்  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என்று சீமான் சீமான் பேசியிருந்தார். 

45
மன சோர்வை ஏற்படுத்த திட்டம்

மன சோர்வை ஏற்படுத்த திட்டம்

 இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் 20 ம் தேதி ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சீமானுக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,  எல்லா இடங்களிலும் வழக்கு போட்டு அலையவைத்து மன சோர்வை ஏற்படுத்த அரசு நினைக்கிறது. இதெற்கெல்லாம் சோர்வையடும் ஆளா நான். நிறைய பார்த்தாச்சு. இதற்கெல்லாம் அச்சப்படுபவர் அரசியலுக்கு வர முடியாது. எத்தனை வழக்கு வேண்டும் என்றாலும் போடுங்கள்.

55
வழக்கை எதிர்கொள்ள தயார்

வழக்கை எதிர்கொள்ள தயார்

 நான் எதிர்கொள்ளுவேன். ஒரே காரணத்திற்காக போடப்பட்ட வழக்கு ஒரே வழக்காக போட சொல்லி நீதிமன்றம் செல்வேன். இதற்கிடையே சம்மன் கொடுக்கப்படுகிறது. நாளை ஒரு வழக்கு விசாரணைக்கு விக்கிரவாண்டி அடுத்ததாக சேலம் செல்ல வேண்டியுள்ளது.  ஒரே ஆளு தான் இருக்கேன். ஏஐ உருவாக்கி எல்லா இடத்திற்கும் அனுப்ப முடியாது.

ஒன்று ஒன்றாகத்தான் செய்யனும். திமுக அரசுக்கு என்னால் தான் நெருக்கடி. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதிகாரத்தில் இருக்கிறவங்க, நிலையானது என நினைப்பது தான் சிரிப்பாக உள்ளது. எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வேன் என கூறினார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சீமான்
அரசியல்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
Recommended image2
Now Playing
தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?! எப்படி வாங்கலாம் தெரியுமா?!
Recommended image3
Now Playing
அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved