School Leave : வெளுத்து வாங்கும் மழை.! பள்ளிகளுக்கு அரசு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Rain school leave
சென்னையில் இடியுடன் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 37 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
heavy rain and 5 dist school leave
கன மழை எச்சரிக்கை
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.. அந்த வகையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எச்சரித்திருந்தது.
school leave
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது