- Home
- Tamil Nadu News
- School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? என்ன காரணம் தெரியுமா?
School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ல் முடிவடைந்து, ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

முன்கூட்டிய தேர்வு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது.
சுட்டெரிக்கும் வெயில்
அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும்.
பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா?
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் தொடக்கத்தில் மிக அதிகமாக இருந்தால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்து பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
விலையில்லா பாடப்புத்தகங்கள்
பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் தினத்திலேயே விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால் மாணவர்கள் தாமதமின்றிப் பாடங்களைக் கற்கத் தொடங்க முடியும்.
ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர் சேர்க்கை மற்றும் பாடத்திட்டத் திட்டமிடல் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

