MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி.. தமிழக ஆளுநருக்கு பின்னடைவு!

துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி.. தமிழக ஆளுநருக்கு பின்னடைவு!

துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் சட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்துள்ளது. 

1 Min read
Author : Rayar r
Published : Feb 04 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
தமிழக அரசு கொண்டு வந்த சட்டம்
Image Credit : Google

தமிழக அரசு கொண்டு வந்த சட்டம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து வந்த நிலையில், மாநில முதல்வரே துணைவேந்தர்களை நேரடியாக நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றம் தடை

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருப்பதே சரியானது. அதனை மாநில அரசுக்கு மாற்றியது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது எனக்கூறி தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 4) விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. அப்போது நீதிபதிகள், ''இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விடுமுறை கால அமர்வு விசாரித்து அவசரம் அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்?'' என்றனர்.

6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்

தொடர்ந்து இந்த வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கான அமர்வை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை துணைவேந்தர்கள் நியமனம் ஏதும் நடக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

அதற்கு தமிழக அரசு சார்பில் வழக்கு முடிவடையும் வரை எந்த நியமனமும் மேற்கொள்ள மாட்டோம் என கூறியது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு தமிழக ஆளுரர் ஆர்.என்.ரவிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆளுநர் ஆர்.என். ரவி
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!
Recommended image2
Now Playing
நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
Recommended image3
விதிமீறும் டாஸ்மாக் கடைகள்.. தமிழக அரசுக்கு எதிராக ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
Related Stories
Recommended image1
இனி ராஜ் பவன் இல்லை; மக்கள் பவன்..! ஆர்.என்.ரவி கோரிக்கையை ஏற்று ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்!
Recommended image2
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved