- Home
- Tamil Nadu News
- நேற்று சாதி நமது அவமானம்..! இன்று..GD நாயுடு பாலம் மகிழ்ச்சி..! நாக்குல நரம்பில்லாத சத்யராஜ்
நேற்று சாதி நமது அவமானம்..! இன்று..GD நாயுடு பாலம் மகிழ்ச்சி..! நாக்குல நரம்பில்லாத சத்யராஜ்
சாதி தொடர்பான நிகழ்ச்சிகளை கடுமையாக எதிர்க்கும் நடிகர் சத்யராஜ் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஜிடி நாயுடு மேம்பாலத்தை வரவேற்று வீடியோ வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதிய நிகழ்வுகளுக்கு எதிரான சத்யராஜ்
நடிகரும், பெரியாரியவாதியுமான சத்யராஜ் பெரியார், திராவிடம் தொடர்பான நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொல்லும் பழக்கம் கொண்டவர். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் கலப்பு திருமணத்திற்கு ஆதரவு, மூட நம்பிக்கைகளுக்க எதிர்ப்பு, சாதிய பெயர்களுக்கு எதிர்ப்பு போன்ற சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர்
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 10 கிமீ தொலைவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். ரூ.1,791 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான இந்த மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அறிவியல் மாமேதையாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமியின் பெயரை குறிப்பிடாமல் ஜிடி நாயுடன் என்ற சாதிய பெயருடன் குறிப்பிட்டு பாலத்திற்கு வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஜிடி நாயுடு பெயருக்கு வலுக்கும் எதிர்ப்பு
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திருப்பூர் குமரன் உட்பட பல பிரபலங்களின் பெயரை விடுத்து சாதிய பெயரை வெளிப்படுத்தும் ஜிடி நாயுடுவின் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக.வின் ஐடி.விங்கில் கூட கோ.துரைசாமி என குறிப்பிட்டுள்ள நிலையில், பாலத்திற்கு ஏன் ஜிடி நாயுடு என பெயர் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.
வரிந்து கட்டிக்கொண்டு வீடியோ போட்ட சத்யராஜ்
மேலும் தமிழகம் முழுவதும் சாதிப் பெயர்களை குறிப்பிடக் கூடிய தெரு பெயர்களை மாற்றவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாதியை குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்டுள்ள தெரு பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டன. அப்படி இருக்கும் நிலையில் முதல்வர் திறந்து வைக்கும் பாலத்தில் மட்டும் சாதி பெயர் இருக்கலாமா என கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே சாதிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் சத்யராஜ் ஜிடி நாயுடுவின் பாலத்திற்கு வரவேற்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.