- Home
- Tamil Nadu News
- E-Scooter Subsidy: குஷியோ குஷி.! இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!
E-Scooter Subsidy: குஷியோ குஷி.! இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்!
Tamilnadu Government: மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது. அதன்படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க தமிழக அரசு ரூ.20,000 மானியம் வழங்க உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தொடக்கத்தில் அதன் வாங்கும் விலையானது சற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால், மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு 2018ம் ஆண்டு அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூபாய் 25,000 ரொக்கம் அல்லது 50% மானியம் வழங்கப்பட்டது. பலரும் இந்த திட்டத்தில் பயனடைந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
அதாவது 2000 ஊழியர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20,000 மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பைக் இல்லாமல் சைக்களில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயனடையவுள்ளனர். மேலும் பெட்ரோலுக்கு பல மடங்கு செலவு செய்து வரும் நிலையில் எலக்ட்ரிக் பைக் மூலம் அதிக பணத்தை மிச்சம் செய்ய வாய்ப்பானது உருவாகியுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்கும் செலவினத்தில் ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்ட வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.

