பழனி கோயிலுக்கு போறீங்களா.? இந்த தகவல் தெரியுமா உங்களுக்கு- வெளியான ஷாக் நியூஸ்
நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பழனி கோயில் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி கோயிலுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில் பழனி முருகன் கோயிலாகும். தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக பழனி முருகன் கோயில் உள்ளது. பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகும். அந்த அளவிற்கு புகழ் பெற்ற முருகன் கோயிலில் நாள் தோறும் பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
அந்தவகையில் பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது. இங்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மேலும் பழனி பகுதியை சுற்றியுள்ள மக்கள் எந்த விஷேசமாக இருந்தாலும் பழனி கோயிலில் தான் நடத்துவார்கள். இந்தநிலையில் பழனி கோயிலில் தற்போது நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளது.
palani panchamirtham
பழனி கோயில் கட்டுப்பாடுகள்
பழனி கோயிலில் அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழனி கோயிலுக்கு 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. .
ரோப் கார் சேவை ரத்து
இந்த நிலையில் பழனி கோயில் செல்லும் பக்தர்களுக்கு மற்றொரு ஷாக் தகவலை பழனி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் பக்தர்கள் செல்வார்கள். அந்த வகையில் பழனி ரோப் கார் சேவையானது பக்தர்களை மலைக்கோயிலுக்கு அழைத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதிய ரேஷன் கார்டு வேண்டுமா.? விண்ணப்பித்த 15 நாட்களில் குட் நியூஸ்- வெளியான அறிவிப்பு
palani murugan temple
பக்தர்களுக்கு வேண்டுகோள்
அதன் படி மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் ரோப் காரில் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் சுமார் 500 பேர் வரை மலைக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் பரமாரிப்பு பணி காரணமாக இன்று முதல் (7.10.2024) ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழனி கோயிக்கு வரும் பக்தர்கள் படி வழியாகவும் இழுவை ரயில் மூலமாகவும் செல்லலாம் என பழனி கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது