MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீட் தேர்விற்கு தயாரா.? மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு- என்னென்ன தெரியுமா.?

நீட் தேர்விற்கு தயாரா.? மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு- என்னென்ன தெரியுமா.?

2025-26ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர், தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வு மையத்தில் செல்போன், கடிகாரம் போன்றவை அனுமதிக்கப்படாது.

1 Min read
Author : Ajmal Khan
Published : May 04 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இன்று நீட் தேர்வு

இன்று நீட் தேர்வு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு முக்கிய தேர்வாக உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடங்கவுள்ளது. அந்த வகையில், நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கான கடந்த பிப்ரவரி 7ல் தொடங்கி மார்ச் 7ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. நீட் தேர்வை இந்தாண்டு நாடு முழுவதும் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

 

24
13 மொழிகளில் நீட் தேர்வு

13 மொழிகளில் நீட் தேர்வு

இந்த வகையில் 2025-26ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரைநடைபெறுகிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. சென்னையில் 44 மையங்களில் 21,960 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடக்கிறது.  
 

Related Articles

Related image1
நீட் பயிற்சி மையத்தில் மோசடி.! கோடிக்கணக்கில் பணம் சுருட்டிக்கொண்டு மாயமான கும்பல்
Related image2
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு! எந்த உடை அணியலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
34
மாணவர்களுக்கு கட்டுப்பாடு

மாணவர்களுக்கு கட்டுப்பாடு

தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்கு மேல் வருவோருக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

44
தோடு, மூக்குத்தி அணிய கூடாது

தோடு, மூக்குத்தி அணிய கூடாது

வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம், முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைமாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பாக கூடுதல் விவரங்களை //neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
நீட் தேர்வு
நீட்
மருத்துவக் கல்லூரிகள்
கல்வி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Recommended image3
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Related Stories
Recommended image1
நீட் பயிற்சி மையத்தில் மோசடி.! கோடிக்கணக்கில் பணம் சுருட்டிக்கொண்டு மாயமான கும்பல்
Recommended image2
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு! எந்த உடை அணியலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved