நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு! எந்த உடை அணியலாம், என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஆடை அணிவது முதல் என்னென்ன கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என்ற விதிமுறையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

NEET exam fraud crime branch
Tomorrow's NEET Exam: Important Information: இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களும் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் நிலையில் தேர்வின் போது கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
Neet Exam 2025
தேர்வு நடைபெறும் நேரம்
தேர்வு மையத்திற்கள் காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்கு பின்னர் வரக்கூடிய நபர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும். தகுதி இழப்பிற்கு வழிவகுக்கும் எந்த ஆடை அல்லது ஆபரணங்களையும் அணியக் கூடாது.
NEET
நீட் ஆடை கட்டுப்பாடுகள்
முழுக்கை சட்டை, கடிகாரங்கள், வளையல்கள், செயின், கூலிங் கண்ணாடிகள் உ்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது. பெண் தேர்வர்கள் ஹேர்பின், கிளிப், ஆடம்பர ஆபரணங்களை அணியக் கூடாது. குறிப்பாக காதணி, மூக்குத்தி, செயின், வளையல்கள், மோதிரம், கொலுசுகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உயரம் அதிகமான ஹீல்ஸ், ஷூக்களை அணிய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Neet Exam
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.