அன்புமணியின் ஆட்டம் குளோஸ்.. நீதிமன்றம் வாயிலாக செக் வைத்த ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்தும் உரிமை தங்களுக்கே உள்ள நிலையில், அதனை அன்புமணி தரப்பு பயன்படுத்த தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு.

கை விரித்த தேர்தல் ஆணையம்
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை தலையீட்டுக்கு பின்னரும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. பாமக தனது அங்கீகாரத்தை இழந்துவிட்ட நிலையில் அவர்களது உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட முடியாது வேண்டுமென்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கான வாதங்களை முன்வைக்கலாம். ஆனால் கட்சியின் சின்னம், பெயருக்கு இரு தரப்பும் உரிமை கோரும் பட்சத்தில் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த அன்புமணி
இந்த நிலையில் அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. அன்புமணி முந்திக்கொண்டதால் அதிமுக கூட்டணியிலும், திருமாவளவன் இருப்பதால் திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாமல் ராமதாஸ் தரப்பு தவித்து வருகிறது.
எனக்கே உரிமை.. ராமதாஸ் திட்டவட்டம்
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், “கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவி காலம் நிறைவுபெற்றுவிட்டது. கட்சியின் நிறுவனரான நானே தலைவைராகவும் தொடர்கிறேன். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், சின்னத்தை பயன்படுத்தவும் தமக்கே அதிகாரம் இருப்பதாகவும்” மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை எனக்கூறி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளதால் மாம்பழ சின்னம் முடங்கும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் அதிமுக பாமக கூட்டணியில் சலசலப்பு உருவாகி உள்ளது.

