- Home
- Tamil Nadu News
- இரண்டாக உடையும் பாமக.? மாம்பழ சின்னம் யாருக்கு.? கெத்து காட்டுவது அன்புமணியா.? ராமதாஸா.?
இரண்டாக உடையும் பாமக.? மாம்பழ சின்னம் யாருக்கு.? கெத்து காட்டுவது அன்புமணியா.? ராமதாஸா.?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி அதிகாரத்தை மையமாக வைத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கட்சியின் தலைவர் பதவி மற்றும் சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமகவில் தந்தை- மகன் அதிகார மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி அதிகாரத்தை மையமாக வைத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராமதாஸ் அன்புமணிக்கும் இடையே மோதல் இருப்பது மறைமுகமாக வெளியே தெரிய தொடங்கியது. பாமக நிறுனரான ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியுள்ளார். ஆனால் அன்புமணியோ பாஜகவின் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
இதனால் தொடங்கிய மோதல் அடுத்தடுத்தும் நீடித்துள்ளது. தருமபுரி தொகுதியில் சௌமியாவை வேட்பாளராக அறிவித்து ராமதாசுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அன்புமணி, அப்போது நடைபெற்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. இதனால் உச்சக்கட்ட கோவத்திற்கு சென்ற ராமதாஸ், பாமக பொதுக்குழுவில் இளைஞர் அணி தலைவராக தனது பேரனை நியமித்து அன்புமணிக்கு உறுதுனையாக இருப்பார் என அறிவித்தார்.
நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கும் ராமதாஸ்
ஆனால் மேடையிலேயே கடும் எதிர்ப்பை தெரிவித்த அன்புமணி மைக்கை தூக்கி வீசி, தன்னை சந்திக்க பனையூர் இல்லத்திற்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே சமாதான பேச்சு நடைபெற்ற நிலையில் திடீரென பாமக தலைவராக இருந்த அன்புமணி செயல் தலைவராக இருப்பார் எனவும், தான் தான் கட்சியின் தலைவர் என அறிவித்தார். இதனால் மோதல் முற்றிய நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புகார்களை வாசித்தார் ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் 153 நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகள் நியமித்து அதிரடி காட்டி வருகிறார்.
அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்க மாட்டேன்
ஆனால் நான் நியமித்த தலைவர்கள் தான் செல்லும் என அன்புமணி பதிலடி கொடுத்து வருகிறார். அதே நேரம் ராமதாஸ், "என் மூச்சு இருக்கும் வரை நானே பாமக தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டுமே" என திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் மேலும், தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அன்புமணி மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் தனது முடிவே இறுதியானது எனவும் உறுதியாக கூறியுள்ளார் ராமதாஸ்,
ராமதாஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அன்புமணி
இதற்கிடையில், அன்புமணி தனது மகள்களை ராமதாஸிடம் சமாதானத்திற்காக அனுப்பியதாகவும், ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. "அன்புமணியை பார்த்தாலே ரத்தம் ஏறுகிறது" அன்புமணி திமுகவை குற்றம்சாட்டியதை ராமதாஸ் "கடைந்தெடுத்த பொய்" என ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடயை பாமகவில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணியை ஆதரிப்பது ராமதாஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே தனது ஆதரவாளர்களை அடுத்தடுத்து புதிய பதவியை வழங்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என கூறி வருவதால் பாமகவின் சின்னத்தை பெற யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாமகவில் அதிகாரம் யாருக்கு.?
அந்த வகையில் பாமக தலைவராக உள்ளவர்களுக்கும் பொதுச்செயலாளராக இருப்பவருக்கு மட்டுமே தேர்தலில் சின்னம் பெறுவதற்கு கையெழுத்து போடும் அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் 2024 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாமக 4.23% வாக்குகள் மட்டுமே பெற்றதை, எனவே மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்கு தேவையான 8 சதவிகித வாக்கு விகிதத்தை அடையவில்லை. இதனால், "மாம்பழம்" சின்னத்தை பாமகவிற்கு என ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பாமக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது, ஆனால் சின்னம் ஒதுக்கப்படுவது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என தகவலல் கூறப்படுகிறது.