இன்று இரவு முதல்! மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துளார்.

tamilnadu weather update
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதற்கே அஞ்சி நடுங்கினர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கள்ளக்குறிச்சியில் 12 செ.மீ, ராமநாதபுரம் 8 செ.மீ, திருவாரூர் 7 செ.மீ, குன்னூர் 6 செ.மீ, நாகையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
TN heavy Rain
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
tamilnadu rain
அதேபோல் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
tamilnadu weatherman
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று கொங்கு மண்டலம், மத்திய தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் இருந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது.
Tamilnadu weatherman pradeep john
தமிழகம் மற்றும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும், சென்னையில் (KTCC) இன்று மழை இருக்காது என தெரிவித்துள்ளார்.