மோன்தா புயல்.! சென்னையில் இனி மழை இல்லை- குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்
Cyclone montha : வங்க கடலில் உருவான மோன்தா புயல், தற்போது ஆந்திராவின் காக்கிநாடா நோக்கி நகர்கிறது. இந்த புயல் வலுவிழந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் ஆனால் சென்னையில் கனமழை முடிந்துவிட்டது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர புயலாக உருவாகியுள்ளது.
அந்த வகையில் அந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அருகே வந்து அங்கிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா நகர்ந்து வருகிறது.
இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், வங்க கடலில் உருவாகியுள்ள புயல் மோந்தா காக்கிநாடாவை நோக்கி நகர்கிறது புயல் தற்போது சென்னையிலிருந்து 420 கி.மீ கிழக்கு-வடகிழக்கில் உள்ளது மற்றும் காக்கிநாடா கடற்கரையை நோக்கி வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இன்று இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது. காற்று முறிவு காரணமாக புயல் பலவீனமடையும் என்பதால், கடுமையான புயலாக கரையை கடக்க வாய்ப்பில்லை. ஆந்திர பிரதேசத்தில் முதன்மையாக மழை எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பிடத்தக்க காற்று தாக்கங்கள் எதிர்பார்க்கப்படவில்லை.
சென்னையில் அடுத்த இரண்டு மணி நேரங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டில் இன்று முழுவதும் மேகமூட்டமான நிலை நீடிக்கும், அவ்வபோது மிதமான மழை பெய்யும் ஆனால் கனமழை முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.