TN Heavy Rain: அடுத்த 3 மணிநேரத்திற்குள் 17 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் மழை! டேஞ்சர் அலர்ட்!
TN Heavy Rain: மன்னார் வளைகுடாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாட்டங்களில் அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, ககர். திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: School Teacher : ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!
அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Transport Department: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! போக்குவரத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!