MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 7 நாட்களுக்கு ஏழரையை கூட்டப்போகும் மழை! விடாமல் ஊத்தப்போகுதாம்! வானிலை கொடுத்த வார்னிங்!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு ஏழரையை கூட்டப்போகும் மழை! விடாமல் ஊத்தப்போகுதாம்! வானிலை கொடுத்த வார்னிங்!

Tamilnadu Rain: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லை, தேனி, தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 14 2025, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : Google

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
 கனமழை வார்னிங்
Image Credit : Google

கனமழை வார்னிங்

அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
அதிமுக பிரமுகர் மனைவியின் கொ*லை வழக்கில் எதிர்பாராத திருப்பம்! பின்னணியில் கணவர்!
Related image2
கூட்டணி பலத்தால் மாபெரும் வெற்றி.. பெரிய அளவில் கை கொடுத்த சிராக் பஸ்வான்!
35
 லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 17ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
Image Credit : our own

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் 18ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 19 மற்றும் 20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

55
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
அதிமுக பிரமுகர் மனைவியின் கொ*லை வழக்கில் எதிர்பாராத திருப்பம்! பின்னணியில் கணவர்!
Recommended image2
கூட்டணி பலத்தால் மாபெரும் வெற்றி.. பெரிய அளவில் கை கொடுத்த சிராக் பஸ்வான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved