தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகிறதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன?
TN Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

tamilnadu weather update
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியாக சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் மீண்டும் மழை மிரட்டப்போகிறதா என வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
Heavy Rain
அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: இன்று இரவு முதல்! மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!
tamilnadu rain
அதேபோல் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் மார்ச் 17 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Heatwave
வெப்ப அளவின் மாறுபாடு
மார்ச் 13 மற்றும் 14 தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் இருக்கக்கூடும். அதேபோல் மார்ச் 15 முதல் 17ம் தேதி வரைதமிழகத்தில் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மழையின் ஆட்டம் இன்னும் முடியல! எந்தெந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுது தெரியுமா?
Chennai weather update
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.