அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுதாம்.!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
heavy rain
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
chennai rain
அதேபோல் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்! 6 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? கனமழைக்கு வாய்ப்பா? பரபரப்பு தகவல்!
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்
மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.