MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் விடாமல் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? பனிபொழிவு குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் விடாமல் மழை அடிச்சு ஊத்தப்போகுதா? பனிபொழிவு குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 04 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடும் பனிபொழிவும், ஒரு சில இடங்களில் உறைபனியும் நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : our own

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அதாவது தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

Related Articles

Related image1
ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
Related image2
சம்பளம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
35
தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை
Image Credit : Google

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை

அதேபோல் நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 06 முதல் 08ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.

45
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
மீனவர்களுக்கான எச்சரிக்கை
Image Credit : our own

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
Recommended image2
என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Recommended image3
Now Playing
அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
Related Stories
Recommended image1
ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
Recommended image2
சம்பளம் உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved