ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!
Postgraduate Teacher: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. எமிக்ஸ் தளம் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.

எமிக்ஸ் இணையதளம்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-24, 2024.25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணுகள் சார்ந்து ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் நியமனம்
* ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பெறப்பட்ட பணி நாடுநர்களின் வீட்டு முகவரி அடிப்படையிலேயே அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக பட்டியல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
* பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை அன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல், ஆகிய 6 பாடங்களுக்கும், பிப்ரவரி 9ம் தேதி திங்கட்கிழமை அன்று தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை 1 உடற்கல்வி இயக்குநர் நிலை-1 அரசியல் அறிவியல் ஆகிய 8 பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வு
* கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் கல்வித்தகுதி (SSLC, HSC, Bachelors degree, Bed. Masters degree)தவிர Community certificate, PSTM certificate if applicable, Differently abled persons certificate if applicable சான்றுகள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
பணி நியமன ஆணை
* பணி நியமன ஆணை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. அதனால் பணிநியமன ஆணையினை ஐந்து நகல் எடுத்து Folder-ல் வைத்து வரிசையாக அடுக்கி பட்டியலுடன் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) அறையில் பிப்ரவரி 11த் தேதியன்று காலை தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
* கலந்தாய்வு நடத்துதல் மற்றும் பணிநாடுநர்கள் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது சார்ந்து அனைத்து ஆயத்தப் பணிகளையும் நேற்று Video conference மூலம் பள்ளிக்கல்வி இயக்குநர். மற்றும் இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி) மூலம் அறிவுறுத்தப்பட்டவாறு மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

