- Home
- Tamil Nadu News
- Tamilnadu Rain: வேலூரில் நேற்று 108 டிகிரி வெயில்... அடுத்த 3 மணிநேரம்.. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Tamilnadu Rain: வேலூரில் நேற்று 108 டிகிரி வெயில்... அடுத்த 3 மணிநேரம்.. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை வெயிலுக்கு இடையே நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வேலூரில் 108 டிகிரி வெப்பம்
தமிழகத்தில் கோடை வெயில் பிச்சு எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர்ந்து பல இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெப்பம் வாட்டி எடுத்தது. அதேபோல் ஈரோடு, திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம், பரமத்தி, மீனம்பாக்கம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், நுங்கம்பாக்கம், கோவை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.
இன்று கனமழை எச்சரிக்கை
அப்படி இருந்த போதிலும் குமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்திருந்தது.
9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இதனிடையே அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

