MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! காலாண்டுத் தேர்வு விடுமுறை அதிகரிப்பு?

School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! காலாண்டுத் தேர்வு விடுமுறை அதிகரிப்பு?

Government School Holiday: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் வழங்க வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 25 2024, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Quarterly Exam

Quarterly Exam

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்க திட்டமிட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கடைசி தேர்வு முடிந்து சனிக்கிழமை முதல் காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Quarterly Exam Holiday

Quarterly Exam Holiday

அதன்படி, செப்டம்பர் 28 சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால்  காலாண்டு தேர்வு விடுமுறை 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: TN Transport Department: இனி அரசு பேருந்துகளில்! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

35
School Teacher

School Teacher

இதுதொடர்பாக ஆசிரியர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கையில்: தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத்  தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது,  முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும்.  அதன்பிறகு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பார்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. 

இதையும் படிங்க:School Holiday: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை? பள்ளிகள் மீண்டும் எப்போது திறப்பு?

45
School Holiday

School Holiday

எனவே, அக்டோபர் 4, 5  (வியாழன், வெள்ளி) ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்தால் போதும் சனி, ஞாயிறுடன் சேர்த்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், காலாண்டுத் தேர்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்த்து எமிஸ் இணையத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அலுவலக வேலைகளும் எஞ்சியிருக்கின்றன. 

இதையும் படிங்க: Kodaikanal Tourists: கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய செய்தி!

55
School Education Department

School Education Department

விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தேர்ச்சி சதவீத தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பர். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவர்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க  வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை  எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்களும் இருந்து வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved