- Home
- Tamil Nadu News
- அமைதியோ அமைதி... செங்கோட்டையனின் வேகம் குறைந்ததற்கு காரணம் யார்.? உண்மையை உடைக்கும் புகழேந்தி
அமைதியோ அமைதி... செங்கோட்டையனின் வேகம் குறைந்ததற்கு காரணம் யார்.? உண்மையை உடைக்கும் புகழேந்தி
ADMK internal rift : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட பிளவு, பதவிகள் பறிப்புக்குப் பிறகு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது.டெல்லி பயணத்திற்குப் பிறகு அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இடையேயான உறவில் சமீப காலங்களாக பிளவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியின் ஒற்றுமையை முக்கியம் என செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகயில் எடப்பாடி பழனிசாமியிடம் பல முறை வலியுறுத்தியும் அவர் செவிசாய்க்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமிய்ல நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம்" பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சியை மேட்டூரில் செங்கோட்டையன் புறக்கணித்தார். அடுத்தாக எடப்பாடியின் கொங்கு பகுதி சுற்றுப்பயணத்தின்போது, செங்கோட்டையனின் ஈரோடு பகுதியைத் தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். "அனைவரும் ஒன்றுபட்டால் 2026 தேர்தலில் வெற்றி பெறலாம்" என்று அவர் கூறினார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்தார்.
இதனால் கடும் கோவமடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களிலேயே செங்கோட்டையன், டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் தற்போது அமைதியின் சின்னமாக காட்சி அளித்து வருகிறார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவியை சந்தித்ததாக வெளியான தகவலை அலறி துடித்து மறுத்தார். இந்த நிலையில் செங்கோட்டையனின் அமைதிக்கு என்ன காரணம் என அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன் பேசிய பின்னர் அவர் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரை சந்தித்தேன்.
அவருடைய பலம் யானை பலமாக இருக்கும் என்றுதான் அவரை போய் சந்தித்தேன். உடனடியாக செங்கோட்டையனை அழைத்த அமித்ஷா அமைதியாக இருக்கும்படி அறிவித்துள்ளார். உட்கட்சி விவகாரத்தில் தலையிடாத அமித்ஷா, செங்கோட்டையனிடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என பேசி அனுப்பி வைத்துள்ளார்.
செங்கோட்டையனை வேதத்தையும் அமித்ஷா குறைத்துள்ளார். மேலும் செங்கோட்டையனையும்ஆப் செய்து விட்டார். செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் முடிவடைந்த பிறகும் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டும் என்றே அமைதியான முறையில் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார். இந்த முழு திட்டமும் டெல்லியில் இருந்து தான் செயல்பட்டு வருகிறது.
சென்னை லாய்ட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலையில் இருந்த அதிமுக அலுவலகம், தற்போது அங்கு இல்லை அமித் ஷாவின் வீடு தான் அதிமுகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இரவு 8 மணி அளவில் 9 மணி வரை அதிமுக பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது என விமர்சித்த புகழேந்தி அதிமுகவின் அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூறினார்.