- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! இந்த மூன்று சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!
பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! இந்த மூன்று சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!
புதுச்சேரியில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. .

தமிழகம் மற்றும் புதுச்சேரி இந்த ஆண்டும் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதமே வெயில் தொடங்கியது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெயிலில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். பள்ளி மாணவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி முன்கூட்டியே தேர்வு நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து புதுச்சேரியில் ஏப்ரல் 28ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மூன்று நாட்கள் அதாவது ஏப்ரல் 28, 29, 30 முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 2, 30, நவம்பர் 15ம் ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகள்) பள்ளிகள் இயங்கும் என தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி திங்கள் கிழமை பாட அட்டவணையையும், ஆகஸ்ட் 30ம் தேதிக்கு செவ்வாய் கிழமை பாட அட்டவணையையும், நவம்பர் 15ம் தேதிக்கு புதன் கிழமை பாட அட்டவணை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.