டோட்டலாகவே மாறப்போகிறது அரசு பள்ளிகள்.! வெளியான சூப்பர் அறிவிப்பு- மாணவர்களுக்கு குஷியோ குஷி
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் வகையில், 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற விகிதத்தில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 175 பள்ளிகளில் 12,043 கணினிகள் ரூ.57.80 கோடி செலவில் நிறுவப்படும்.
school teacher
அரசுப்பள்ளிகளில் கல்வி
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் உயர் தரத்தோடு தொழில்நுட்ப வசதியோடு பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 5 மாணவர்களுக்கு ஒரு கணிணி என்ற முறையில் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,அரசுப் பள்ளி மாணவர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.
school students
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
முதற்கட்டமாக 2024-25-ஆம் கல்வியாண்டில் 1000 மாணவர்களுக்கு மேல் பயின்றுவரும் அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முன் முயற்சிகள் (ICT & DI) கூறுகளின் கீழ் 3090 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் 60:40 என்ற விகிதத்தில் ஐந்து ஆண்டுகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவ ரூ.520,13,04,447-க்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
school student
மாறிவரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி
இந்நிலையில், மேல்நிலைக் கல்வியில் கணினிப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாறிவரும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மாணவர்கள் முழுமையான கற்றல் அனுபவத்தை பெறுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு அடிப்படையிலான நுட்பங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்படுத்துவதற்கும், நவீன கணினி மொழியில் மாணவர்கள் செய்து கற்றல் மூலம் நேரிடை அனுபவங்களைப் பெறுவதற்கும்,
5 மாணவர்களுக்கு ஒரு கணிணி
தற்போதுள்ள பயன்பாட்டில் உள்ள கணினி அறிவியல் ஆய்வகங்களை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையிலான கணினிகளுடன் கூடிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகளில் உள்ள 2,82,021 மாணவர்களது எண்ணிக்கைக்கேற்ப 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 56,422 கணினி எண்ணிக்கையுடன் மூன்று கட்டமாக உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகத்தினை உருவாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
school student
நிதி ஒதுக்கி அரசாணை
பாடப்பிரிவுகள் உள்ள 2,903 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இப்பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், முதற்கட்டமாக 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12,043 கணினிகளை மேற்கண்ட உபகரணங்களுடன் கூடிய புதிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை ரூ.57.8064 கோடியில் மேம்படுத்தலாம் என்றும், மேற்காண் பணிகளுக்கான நிறுவனத்தினை தெரிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்து அரசின் ஆணையினை கோரியுள்ளார்.
school student
57 கோடி ரூபாய் ஒதுக்கீடு
2024.25.ஆம் கல்வியாண்டில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகள் உள்ள 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு ஒரு கணினி என்ற கணக்கில் 12,043 கணினிகளுடன் கூடிய நவீன கணினி அறிவியல் ஆய்வகங்களை ரூ.57,80,64,000/- (ரூபாய் ஐம்பத்தேழு கோடியே எண்பது லட்சத்து அறுபத்து நான்காயிரம் மட்டும்) செலவினத்தில் ஏற்படுத்திடவும், நவீன கணினி அறிவியல் ஆய்வகம் அமைப்பதற்கான நிறுவனத்தினை தெரிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதியும் வழங்கி அரசு ஆணையிடுகிறது.