TN Govt : அடிச்சது ஜாக்பாட்.. பத்திரப்பதிவில் மகளிருக்கு சலுகை - தமிழக அரசின் அசத்தல் திட்டம் இதோ
வீடு, மனை போன்ற சொத்துக்களை, மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது, அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும்போது, அதற்கான மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மவுனம்மத்திய அரசு பரிந்துரை அடிப்படையில், சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் பயன் பெரும் வகையிலான பல திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து வருகிறார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், மகளிர் பெயரில் வீடுகள் ஒதுக்கப்படும் என, அறிவித்து உள்ளார்.
தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான பணிகள் துவங்கி உள்ளன. இந்த வரிசையில், சொத்து வாங்கும் மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்களில் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் அதிகமாக உள்ள சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு கட்டணம், முத்திரை தீர்வையை குறைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம், மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கான தீர்வை, கட்டணங்களை குறைத்தால், அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
மகளிருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதனால் பத்திப்பதிவும் அதிகரிக்கும். இந்த சலுகை, ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளனர். இந்த செய்தி நடைமுறைக்கு வந்தால் மகளிருக்கு நிச்சயம் இந்த திட்டம் பலனளிக்கும்.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்