- Home
- Tamil Nadu News
- 10ஆயிரம் காலிப்பணியிடம்.! 200 முன்னனி நிறுவனங்கள் - ஒரே நாளில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்- அசத்தல் அறிவிப்பு
10ஆயிரம் காலிப்பணியிடம்.! 200 முன்னனி நிறுவனங்கள் - ஒரே நாளில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்- அசத்தல் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 10000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

200 முன்னனி நிறுவனங்கள்.! 10ஆயிரம் காலிபணியிடம்
தமிழகத்தில் ஆண்டு தோறலும் பள்ளி, கல்லூரி ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளை முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி அலைகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கி வருகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காகவும் பயிற்சியோடு சேர்த்து கடன் உதவி திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
நாமக்கல் வேலைவாய்ப்பு முகாம்
இதே போல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட தனியார் துறையோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் படி பல லட்சம் இளைஞர்களுக்கு வேலையும் கிடைத்துள்ளது. இந்தநிலையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்த வகையில்,
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெரி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 01,03,2025 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நாமக்கல் மாவட்டம் பாச்சலில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆயிரம் காலிப்பணியிடம்
இந்த முகாம்களில் சிறப்பு அம்சங்கள்களாக 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று 10000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லையெனவும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி என்ன.?
கல்வித்தகுதிகள்
* 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ./டிப்ளமோ / நர்சிங் பார்மஸி/பொறியியல் பட்டப் படிப்பு
மேலும் விவரங்களுக்கு
04286-222260 / 98437 40575
* தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்