- Home
- Tamil Nadu News
- காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு.! பள்ளிகளுக்கு பறந்த கல்வித்துறையின் அதிரடி உத்தரவு
காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு.! பள்ளிகளுக்கு பறந்த கல்வித்துறையின் அதிரடி உத்தரவு
Private schools special class ban : காலாண்டு விடுமுறையின் போது மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்ட நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு இன்றோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் மீண்டும் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. அதே நேரம் ஒரு சில தனியார் பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதியே திறக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவர்களுக்கு 6 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கவுள்ளது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாக மாணவர்களுக்கு சிறிது விடுமுறை கூட கிடைக்காத காரணத்தால் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாரர் மொஹைதீன் அப்துல் காதர் என்பவரின் இரு மகள்கள் சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகைப்புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜூப்ளி பள்ளியில் பயில அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் பள்ளிகளின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தால் சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்ட தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செக் வைத்துள்ளது.