- Home
- Tamil Nadu News
- தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ இவ்வளவு தானா.? சந்தோஷத்தில் கூடை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ இவ்வளவு தானா.? சந்தோஷத்தில் கூடை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்
சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. வரலாறு காணாத விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tomato Onion Price Drop : காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. அதிலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை இந்த இரண்டின் தேவை மிக அதிகம், இல்லத்தரசிகள் மற்ற காய்கறிகளை வாங்குவதை விட தக்காளி மற்றும் வெங்காயத்தை தான் வாங்கி செல்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதன் படி ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கும், தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையானது.
tomato price drop
உச்சத்திற்கு சென்ற தக்காளி, வெங்காயம் விலை
இந்த விலைய உயர்வால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பை நிறைய வாங்கி சென்ற மக்கள் கை அளவில் மட்டுமே வாங்கும் நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் வெங்காயம் மற்றும் தக்காளியின் வரத்து அதிகரிப்பால் விலையானது சரசரவென வீழ்ச்சி அடைந்துள்ளது.
அந்த வகையில் 100 ரூபாய்க்கு 6 முதல் 5 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் வரத்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் 100 ரூபாய்க்கு 5 கிலோ வரை பெரிய வெங்காயம் விற்பனையாகிறது.
onion price drop
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
இதனால் இல்லத்தரிசகள் இனி தான் நல்ல சான்ஸ் என பை நிறைய காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
Koyambedu market
சரிந்த காய்கறிகளின் விலை
பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
vegetable prices
இஞ்சி விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.