- Home
- Tamil Nadu News
- தக்காளி, வெங்காயம் விலை குறைந்தது.! காய்கறி சந்தையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
தக்காளி, வெங்காயம் விலை குறைந்தது.! காய்கறி சந்தையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?
Tomato Onion Price Today : கனமழையால் தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலையும் சமீபத்தில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது தரமான வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைந்து வருகிறது.

tomato price
தக்காளி, வெங்காயம்
சமையல் என்றாலே முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகளாகும், அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லையென்றால் சமையல் என்பது சாத்தியம் இல்லாத காரியம். எனவே இல்லத்தரசிகள் தக்காளி, வெங்காயத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த இரண்டு காய்களின் விலை அதிகரித்தால் வீடு முதல் ஓட்டல் வரை தக்காளி சார்ந்த உணவு பொருட்கள் சமைப்பது குறைந்து விடும். அதே நேரத்தில் தக்காளி விலை குறைந்தால் தக்காளி சாதம், தக்காளி ஜூஸ் என தக்காளிலேயே அனைத்து உணவுகளும் தயாராகி விடும்.
tomato 1 kg price
ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் காய்கறி சந்தைக்கு குறைவான அளவே தக்காளி வந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு சந்தையில் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சிறிய அளவில் தரம் குறைந்த தக்காளியே ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளியின் விலையானது சற்று குறைந்துள்ளது.
tomato onion
சற்று குறைந்த தக்காளி விலை
அதன் படி ஒரு கிலோ தக்காளி 35 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இரண்டரை முதல் 3 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் மழையின் தாக்கத்தை பொறுத்து தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ONION
உச்சத்தில் வெங்காயம் விலை
அதே நேரத்தில் வெங்காயத்தின் விலையானது கடந்த பல மாதங்களாகவே அதிகரித்துள்ளது. அதிலும் தரமான வெங்காய வரத்து குறைந்திருந்தது. மிக சிறிய அளவிலான வெங்காயமே ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதிலும் தரம் உயர்ந்த பெரிய அளவிலான வெங்காயம் ஒரு கிலோ 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தரமான வெங்காயம் காய்கறி சந்தைக்கு வர தொடங்கியுள்ளது.
Onion Price Today
அதிகரித்த வெங்காய வரத்து
அதன் படி ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று இரண்டரை கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரிப் பருவ வெங்காயத் வரத்து வர தொடங்கியுள்ளதால் வெங்காயம் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price today
கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 55 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது