- Home
- Tamil Nadu News
- நான் விஜய்யை அப்படி சொல்வேனா! அவரு எங்க வீட்டு பிள்ளை! அப்படியே பல்டி அடித்த பிரேமலதா!
நான் விஜய்யை அப்படி சொல்வேனா! அவரு எங்க வீட்டு பிள்ளை! அப்படியே பல்டி அடித்த பிரேமலதா!
சுற்றுப்பயணத்தில் 'நேத்து முளைச்ச காளான்' என பிரேமலதா விஜயகாந்த் பேசியது, நடிகர் விஜய்யை குறிப்பதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பிரேமலதா, தான் விஜய்யை சொல்லவில்லை. அவர் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றும் கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் முதற்கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி.. இல்லம் நாடி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் 3ஆம் கட்டமாக மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா, நேற்று முன்தினம் சிவகங்கையில் மக்களை சந்தித்தார்.
நேத்து முளைச்ச காளான்
அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த்: வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். அதேபோல், மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது. நேத்து முளைச்ச காளான் எல்லாம் இங்க எடுபடாது. மக்களுக்கு நல்லது நினைக்கும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்களே வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்கள் என்றார்.
விஜய்யை விமர்சித்த பிரேமலதா
மேலும் நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு அமையும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரேமலதா 'நேத்து முளைச்ச காளான்' என்று விஜய்யை விமர்சித்ததாக கருத்து நிலவி வந்தது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
நான் விஜய்யை 'நேற்று முளைத்த காளான்' என்று சொல்லவில்லை. விஜயகாந்தும், எஸ்ஏசியும் 17 படங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கிப் பேசவில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

