- Home
- Tamil Nadu News
- ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! அதுமட்டுமல்ல! வக்கிர புத்தி கயவரை விடக்கூடாது இபிஎஸ்!
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! அதுமட்டுமல்ல! வக்கிர புத்தி கயவரை விடக்கூடாது இபிஎஸ்!
திருப்பதியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! அதுமட்டுமல்ல! வக்கிர புத்தி கயவரை விடக்கூடாது இபிஎஸ்!
ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இன்சிர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, ரயில் கே.பி. குப்பத்தை நெருங்கும் போது கர்ப்பிணி பெண் ரயில் கழிவறைக்கு சென்றுள்ளார்.
கர்ப்பணி பெண்
அப்போது மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில் கர்ப்பணி பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து கர்ப்பிணி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணியை கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளான். பின்னர் ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் எதுவும் நடக்காதது போல இறங்கிச் சென்றுள்ளார். ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
லியல் தொல்லை
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரித்த போது குற்ற செயலில் ஈடுபட்டது ஹேமராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஹேமராஜை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கோவை-திருப்பதி இடையே சென்றுக்கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக அரசு
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை; பள்ளி, கல்லூரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை; தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.