- Home
- Tamil Nadu News
- மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணி காரணமாக, இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது. கோவை, பெரம்பலூர், மற்றும் ஆவடி ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழகத்தில் மின் தேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பேன், ஏசி இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.
பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பலூர்
அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தபுருடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
ஆவடி
திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், மாசிலாமணீஸ்வர் நகர், எட்டியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.