வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தின் பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் இடங்களின் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர், செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, முத்துலாபுரம், கணேசபுரம், கதிர்நாயக்கன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, போடிக்காமன்வாடி, நெல்லூர், குப்பிநாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம் காலனி, நெல்லூர் காலனி, மருதாநதி அணை, கோம்பை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பெரம்பலூர்
பல்லடம்
கரடிவாவி, என்பட்டி, செளகரச்சல், கே.என்.புரம், ஆரக்குளம், புளியம்பட்டி, கர்ணம்பேட்டை, அய்யம்பாளையம், வடுகபட்டி, மார்க்கம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
பெரம்பலூர்
கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.