Power Shutdown in Chennai : சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை..! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெளியான பட்டியல்
மின் பராமரிப்பு பணிக்காக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை ரெட்ஹில்ஸ் தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
power cut
சென்னையில் மின் தடை
மின்பாதை பராமரிப்பு பணி, துணை மின் நிலையம் பராமரிப்பு, மின் கம்பங்களில் ஏற்பட்ட பழுதுகள் போன்றவற்றை பராமரிக்க அவ்வப்போது மின்சார வாரியம் சாரபாக பழுது பார்க்கும் பணியானது நடைபெறும். அதற்காக முன் கூட்டியே பொதுமக்களுக்கு மின் தடை தொடர்பான தகவல் வெளியிடப்படும். அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று (4.9.23) மின் தடை செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (04.09.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
power cut
ரெட்ஹில்ஸ்:
எல்லம்மன்பேட்டை, லட்சுமிபுரம், கோனிமேடு, பெரியார் நகர், கண்டிகை, சோலையம்மன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை:
டோல்கேட் வடக்கு முனைய சாலை, TH சாலை, திடீர் நகர், மீன்பிடி துறைமுகம், வீரராகவன் தெரு, VOC தெரு சிவகாமி நகர், ஜீவா நகர், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், PPD சாலை, மேட்டு தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை... எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம் தகவல்