- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்? இதோ லிஸ்ட்!
தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்? இதோ லிஸ்ட்!
தமிழ்நாட்டில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழகத்தில் மின்தடை
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம்
பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பூர் மாவட்டம்
ஆத்துபாளையம், வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அஞ்சேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏவிபி லேஅவுட், போயம்பாளையம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை.
திருவாரூர் மாவட்டம்
காரக்கோட்டை, எடகெலையூர், மேலவாசல், அலிவலம், பவித்திரமாணிக்கம், விளமல், பவித்திரமாணிக்கம், கொரடாச்சேரி டவுன், கிலாரியம், கமுகக்குடி, பெருமாள்கரம், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவாலிக்கல், காக்ககோட்டூர், மல்லியங்கரை, பேட்டை, பெருங்குடி, மருவத்தூர், பேரளம், கோவிந்தச்சேரி, பொரசக்குடி, சக்கரகொத்தங்குடி, ஆதிச்சபுரம், நெம்மேலி, புள்ளவராயன்குடிகாடு, எழிலூர், மருதவனம், வங்காநகர், எடையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
ஈரோடு மாவட்டம்
சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, மந்திரிபாளையம்,நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.