- Home
- Tamil Nadu News
- ஞாயிற்றுக் கிழமை அதுவுமா சென்னையில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஞாயிற்றுக் கிழமை அதுவுமா சென்னையில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
வெயிலால் மின்தடை தேவை அதிகரிப்பு
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இதனால் கொஞ்ச நேரம் கூட ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மின் தேவையும் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அப்படி சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.
அம்பத்தூர்
2வது பிரதான சாலை, 2வது குறுக்குத் தெரு, 9வது முதல் 11வது குறுக்குத் தெரு, செக்டார் 1 தெற்கு கட்டம், மகாத்மா காந்தி தெரு, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.