- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் சனிக்கிழமை அதுவுமா இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
தமிழகத்தில் சனிக்கிழமை அதுவுமா இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (10.01.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமுடிவாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தற்போதைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாம் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது பவர் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான ஒன்றாகும். மின்தடை செய்யப்படும் நேரத்தில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல், மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை
இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருமுடிவாக்கம்
முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், மேலந்தை தெரு, பாலவராயன் குளக்கரை தெரு, ஜெகநாதபுரம், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, பூஜா அவென்யூ, பாபு நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

