- Home
- Tamil Nadu News
- தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், கோவை, உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும். மின்தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும்.

மாதாந்திரப் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல்
கோவை
எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர், துடியலூர் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், ,கே.என்.ஜி.புதூர்,வி.ஜி.மருத்துவமனை பகுதி, மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி, கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர், சிந்தலவடம்பட்டி துணை மின்நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
ஈரோடு
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா மற்றும் அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.
சென்னை
1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்பிரமணியம் காலனி, 1 முதல் 3வது தெரு மாளவியா அவென்யூ, எம்.ஜி. சாலை, ஆர்.கே. நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.