- Home
- Tamil Nadu News
- மக்களே எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம் முடிச்சுடுங்க! தமிழகத்தில் இன்று 7 மணி நேரம் மின்தடை!
மக்களே எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம் முடிச்சுடுங்க! தமிழகத்தில் இன்று 7 மணி நேரம் மின்தடை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, பெரம்பலூர், உடுமலைப்பேட்டை, தேனி, மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

பராமரிப்பு பணி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரடைந்ததை அடுத்து பல்வேறு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் மழை பெய்தாலே போதும் உடனே மின்தடை செய்து விடுகின்றனர். இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநாகை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர்
சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை, பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், கணபதிபாளையம், பொடிப்பட்டி, பாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சி.வி.பட்டி, சங்கர்நகர், காந்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தேனி
பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
திருவாரூர்
மணலூர், வாசுதேவமங்கலம், புளியங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

