MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீதி கேட்கும் ஒற்றைக்குரல்... களமிறங்கும் பொற்கொடி..! திமுக கோட்டையைத் தகர்க்கும் 'ஆம்ஸ்ட்ராங்' அஸ்திரம்..!

நீதி கேட்கும் ஒற்றைக்குரல்... களமிறங்கும் பொற்கொடி..! திமுக கோட்டையைத் தகர்க்கும் 'ஆம்ஸ்ட்ராங்' அஸ்திரம்..!

இது வெறும் தேர்தல் போட்டி அல்ல; இது அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு பெண் நடத்தும் தர்ம யுத்தம். ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு நீதி கேட்கும் ஒரு போராட்டமாகவே அவரது ஆதரவாளர்கள் இதைப் பார்க்கின்றனர்.

3 Min read
Author : Thiraviya raj
| Updated : Mar 26 2026, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
திமுகவின் தூக்கத்தைக் கலைக்கும் பொற்கொடி
Image Credit : x

திமுகவின் தூக்கத்தைக் கலைக்கும் பொற்கொடி

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் சென்னை மாநகரின் இதயப்பகுதியான திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி, ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு போர்க்களமாக மாறி இருக்கிறது. மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்கும் ஒற்றை இலக்கோடு, அதிமுக கூட்டணியின் பலத்தோடு இங்கு களமிறங்குவது ஆளுங்கட்சியான திமுகவின் தூக்கத்தைக் கலைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கைக்குழந்தையுடன் தவிப்பு: போராளியான பொற்கொடி!
Image Credit : our own

கைக்குழந்தையுடன் தவிப்பு: போராளியான பொற்கொடி!

2024 ஜூலை மாதத்தின் 5ம் நாளான அந்த கருப்பு தினம், தமிழகத்தையே உலுக்கியது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், தலைநகரின் மையப்பகுதியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திமுக ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஒரு மிகப்பெரிய சான்றாக அமைந்தது. அன்று தனது கணவரின் உடலை அடக்கம் செய்யக் கூட இடம் கிடைக்காமல், கையில் பச்சிளம் குழந்தையோடு கண்ணீர் மல்க நின்ற பொற்கொடியின் முகம் இன்று ஒவ்வொரு வாக்காளரின் மனசாட்சியையும் தட்டுகிறது.

"என் கணவரின் மரணத்திற்கு விடை கிடைக்காமல் தவிக்கிறேன்... இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதற்கு என் கணவரின் கொலையே சாட்சி!" என்கிற வைராக்கியத்தோடு, விடைதேடும் ஒரு பெண்ணாக அவர் தேர்தல் களத்தில் குதித்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே மிகப்பெரிய அனுதாப அலையை உருவாக்கியுள்ளது.

Related Articles

Related image1
அந்த பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்..? திமுக எஸ்.வி.சேகரின் திமிர் பேச்சு..!
37
 திமுக கோட்டையில் விழும் சரிவு
Image Credit : our own

திமுக கோட்டையில் விழும் சரிவு

திரு.வி.க நகர் தொகுதி நீண்டகாலமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படலாம். ஆனால், தற்போது நிலவும் சூழல் அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள சுமார் 40% பட்டியலின வாக்காளர்களான ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவால் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்தவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதித்திற்காகவும் சமரசம் இன்றிப் போராடினார். தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏழை, எளிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் முன்னின்று செய்தார். குறிப்பாக, வன்னியர், சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங் ஒரு நம்பிக்கையான அரணாக இருந்தார்.

47
ஒட்டுமொத்தமாக திரும்பும் வாக்குகள்
Image Credit : x

ஒட்டுமொத்தமாக திரும்பும் வாக்குகள்

அவர் சாதிய ரீதியான பிரிவினைகளை நிராகரித்து, அனைவரையும் ஒருமித்த குரலாக ஒன்றிணைத்தார். பல்லாயிரக்கணக்கானோருக்குப் பலன் அளித்த கல்வி, சமூக நலத் திட்டங்களை அவர் முன்னெடுத்தார். அவரது படுகொலை, தமிழக அரசியல் மற்றும் சமூகச் செயல்பாட்டில் ஒரு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு சமூகப் போராளியாக எப்போதும் நினைவு கூறப்படுகிறார். எளிய மக்களின் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த ஒரு தலைவரின் மரணம், அந்த வாக்கு வங்கியை ஒட்டுமொத்தமாகப் பொற்கொடியின் பக்கம் திருப்பியுள்ளது.

மேலும், பாமக தலைவர் அன்புமணியின் முழுமையான ஆதரவு பொற்கொடிக்கு இருப்பதால், இத்தொகுதியில் உள்ள 30% வன்னியர், இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பொற்கொடிக்கு வந்து சேரும். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியும் இதனுடன் இணைவதால், திமுகவின் 'வெற்றி' இந்த முறை வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

57
நீதி கேட்கும் போர்க்களம்
Image Credit : x

நீதி கேட்கும் போர்க்களம்

திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி, பெரம்பூர், புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கும், அவரது விசுவாசமான தொண்டர் படையும் பொற்கொடிக்கு மிகப்பெரிய பலம். திமுக கூட்டணியில் விசிக போன்ற கட்சிகள் இருந்தாலும், 'ஆம்ஸ்ட்ராங்' என்கிற ஒற்றைப் பெயர் தரும் உணர்ச்சிப் பிழம்பானது திமுக கூட்டணியின் தலித் வாக்குகளைச் சிதறடித்து, பொற்கொடிக்குச் சாதகமாக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

இது வெறும் தேர்தல் போட்டி அல்ல; இது அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு பெண் நடத்தும் தர்ம யுத்தம். ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு நீதி கேட்கும் ஒரு போராட்டமாகவே அவரது ஆதரவாளர்கள் இதைப் பார்க்கின்றனர். அதிமுக + பொற்கொடியின் தனிப்பட்ட செல்வாக்கு + பாமகவின் ஆதரவு என இந்த மும்முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திமுக மேலிடம் தற்போது 'ஷாக்கில்' உள்ளது.

67
அங்கீகாரத்த எடப்பாடியார்
Image Credit : Asianet News

அங்கீகாரத்த எடப்பாடியார்

திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட பொற்கொடிக்கு வாய்ப்பளித்து, 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமியின் அரசியல் முடிவு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மறைந்த சமூகப் போராளி ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்குப் பிறகு, அவரது குடும்பம் தவித்தபோது அவர்களுக்குத் துணையாக நின்று, அரசியல் ரீதியான அங்கீகாரத்தை எடப்பாடியார் வழங்கியுள்ளார்.

திரு.வி.க நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வேட்பாளராக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதிமுகவின் அடையாளமான 'இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பளித்திருப்பது, எடப்பாடியாரின் பரந்த மனப்பான்மையையும், சமூக நீதியின் மீதான அவரது பிடிப்பையும் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், அந்தப் பகுதி மக்களின் மனங்களை எடப்பாடியார் வென்றுள்ளார். "அதிமுக என்றும் எளியவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பான அரணாக இருக்கும்" என்பதைச் சொல்லால் மட்டுமல்லாமல், சின்னத்தை வழங்கிய செயலின் மூலமும் அவர் நிரூபித்துள்ளார். இந்தத் கூட்டணி பலம், திரு.வி.க நகர் தொகுதியில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் எனத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

77
விடை தேடும் ஒற்றைக்குரல்
Image Credit : our own

விடை தேடும் ஒற்றைக்குரல்

திரு.வி.க நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வைக்கும் ஒவ்வொரு அடியும், திமுகவின் கோட்டைக்கு வைக்கப்படும் வேட்டு. ஒரு சாமானியப் பெண்ணாக, பாதிக்கப்பட்ட மனைவியாக அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி என்ன பதில் சொல்லப்போகிறது? 2026 தேர்தல் முடிவுகள் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு இந்த தேர்தல் நீதியாக அமையுமா? என்பதைத் தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

About the Author

TR
Thiraviya raj
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
Cauvery Calling: 13 கோடி மரங்கள் நட்டு 'காவேரி கூக்குரல்' சாதனை! வறண்ட நிலத்திலும் விவசாயிகளுக்கு வருமான மழை!
Recommended image3
TN Rain Alert: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!
Related Stories
Recommended image1
அந்த பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்..? திமுக எஸ்.வி.சேகரின் திமிர் பேச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved