அந்த பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்..? திமுக எஸ்.வி.சேகரின் திமிர் பேச்சு..!
அரசியல் லாபத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த சம்பவத்தைக் கொச்சைப்படுத்துவது தர்மமாகாது.

ஸ்டாலினின் நடைபயிற்சி நண்பர்
தமிழக அரசியல் களம் எப்போதும் வார்த்தை மோதல்களுக்குப் பஞ்சம் இல்லாதது. ஆனால், தற்போது நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ள ஒரு கருத்து, அரசியல் நாகரிகத்தின் எல்லைகளையே தாண்டிவிட்டதாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. திமுக ஆதரவாளராகவும், முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய 'நடைபயிற்சி நண்பராகவும்' அறியப்படும் எஸ்.வி.சேகர், 'தூத்துக்குடி நிர்பயா' வழக்கு குறித்துப் பேசியுள்ள விதம், தமிழகப் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அருவருப்பின் உச்சம்: என்ன சொன்னார் எஸ்.வி.சேகர்?
தூத்துக்குடியில் நடந்த அந்த கொடூரமான சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் எஸ்.வி.சேகர் பேசியிருப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியை இவ்வளவு இழிவாகச் சித்தரிக்க எப்படி மனது வந்தது என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. "சொல்லவே கூசும் வகையில் அருவருக்கத்தக்க கருத்துக்களைத் தெரிவிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் லட்சணமா?" எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திமுக குணம் தொற்றிக்கொண்டதா? - அதிமுகவின் சாட்டையடி
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. "திமுக-வுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் அந்த ரத்தத்திலேயே ஊறிய 'பெண்களுக்கு எதிரான குணம்' வந்துவிடும் போல" என அதிமுக தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இது வெறும் எஸ்.வி.சேகரின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த தொடர் குற்றங்களும், அதற்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்குமே இத்தகைய துணிச்சலை அவருக்குக் கொடுத்துள்ளது'' என அதிமுக விளாசுகிறது.
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா?
தமிழகம் எப்போதும் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த பெருமை கொண்டது. ஆனால், முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர்களே பெண்களைப் பற்றி இவ்வளவு இழிவான எண்ணம் கொண்டிருப்பதை அதிமுக சுட்டிக்காட்டி, "தமிழகப் பெண்களின் பாதுகாப்பு பற்றி இவ்வளவு இழிவான எண்ணம் கொண்ட இவர்களின் ஆட்சி மீண்டும் வேண்டுமா?" என மக்களிடம் ஒரு முக்கியக் கேள்வியை முன்வைக்கிறது.
ஸ்டாலினுடன் தினமும் நடைபயிற்சி செல்லும் நண்பரின் வாயிலிருந்தே இத்தகைய விஷமக் கருத்துக்கள் வரும்போது, முதலமைச்சரின் மௌனம் எதை உணர்த்துகிறது? தனது நண்பரின் கருத்தை அவர் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் கேட்கப்படுகின்றன.
அரசியல் லாபத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த சம்பவத்தைக் கொச்சைப்படுத்துவது தர்மமாகாது.
