பொன்முடியின் பதவியை பறித்த ஸ்டாலின்.! வெளியான முக்கிய அறிவிப்பு
அமைச்சர் பொன்முடி அவர்களின் சர்ச்சை பேச்சுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Ponmudi controversial speech : தமிழக மூத்த அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் பெண்கள் இலவச பயணத்தை ஓசி டிக்கெட், ஆதிதிராவிட அதிகாரியை ஜாதி பெயரை கூறி அழைத்து போன்ற சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் திராவிடர் கழகம் தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்முடி, விபச்சார சைவம், வைணவம் தொடர்பாக விலைமாதுவோடு ஒப்பிட்டு அறுவறுக்தக்க கருத்தை பேசியிருந்தார்.
பொன்முடியும் சர்ச்சை கருத்தும்
இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவினர் பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் பொன்முடி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனவும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இ
ந்த நிலையில் பொன்முடியின் பேச்சுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கூறியிருந்தார்.
துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திமுகவின் துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.