சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியல்! கமலை சீண்டுகிறாரா திருமா?
2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் எந்த நகர்வும் இருக்காது என திருமாவளவன் தெரிவித்தார்.

Thirumavalavan
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில் கடந்த 24ம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலா, திருமஞ்சி, செண்பகம் ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
Thol Thirumavalavan News
இதனையடுத்து நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 1990ல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன். நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது! என்ன காரணம் தெரியுமா?
VCK Thirumavalavan
சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி சொகுசாக வாழ்ந்துவிட்டு இளமை காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஊர் ஊராய் செல்லத் தேவையில்லை என்ற சொகுசு இருக்கிறது. உடனடியாக கட்சியை தொடங்கலாம், ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
2026 Assembly Elections
2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகரும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளில் கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதையும் வெளிப்படையா சொல்றதில்ல! பாஜகவை நம்ப முடியாது! ஒரே போடாக போட்ட ஆ.ராசா!
kamal haasan
திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகரும் இருக்காது திமுகவை எச்சரிக்கும் விதமாகவும், சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருவது என்ற பேச்சு கமல்ஹாசனை குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டியே திருமாவளவனின் பேச்சு இருப்பதாகவே கூறுகின்றனர்.